HR Views
சில டிப்ஸ்.....ஒரு அறையில் நூறு செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அழகாக அடுக்கி வைக்கவும். பின்னர் நேர்முக தேர்வுக்கு வந்துள்ள ஆட்களில், மூன்று அல்லது நான்கு ஆட்களை அந்த அறைக்கு அனுப்பி விடவும். ஒரு ஆறு மணி நேரம் கழித்து வந்து, அவர்களின் செய்கைகளை வைத்து ஆட்களை தேர்ந்தெடுக்கவும்.1. செங்கற்களை சரியாக எண்ணியவர்களை கணக்கியல் துறைக்கு அனுப்பவும்.2. மீண்டும் மீண்டும் எண்ணுபர்களை கணக்காய்வு துறைக்கு அனுப்பவும்3. கற்களை மாற்றி மாற்றி வைத்திருபவர்களை தொழில்நுட்ப துறைக்கு அனுப்பவும்.4. வித்தியாசமான முறையில் மாற்றி அடுக்கி வைத்திருப்பவ்ர்களை வியாபார முன்னேற்றத்துறைக்கு அனுப்பவும்.5. ஒருத்தர்மேல் ஒருத்தர் கல்லை எறிந்துகொண்டு இருந்தால் செயல்துறைக்கு (Operations) அனுப்பவும்.6. தூங்கி கொண்டு இருந்தால் பாதுகாப்பு துறைக்கு அனுப்பவும்.7. கற்களை பல துண்டுகளாக உடைத்துக் கொண்டு இருந்தால் கணிணி துறைக்கு அனுப்பவும்.8. ஒன்றுமே செய்யாமல் உட்கார்ந்து இருந்தால் மனிதவள துறைக்கு அனுப்பவும்.9. வித்தியாசமான முறையில் முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, ஒரு கல்லையும் மாற்றாமல் இருப்பவர்களை விற்பனை பிரிவுக்கு அனுப்பவும்.10. கடைசியாய் ஒன்றுமே செய்யாமல் எந்த ஒரு கல்லையும் மாற்றி வைக்காமல் சும்மா உட்கார்ந்து பேசிகொண்டு இருந்தால் அவர்களை வாழ்த்தி உயரதிகாரியாய் வைக்கவும்.என்ன நண்பர்களே தெரிந்து கொண்டீர்களா? நீங்கள் புதிதாய் நிறுவனம் ஆரம்பிக்கும்போது உஙகளுக்கு உபயோகமாய் இருக்கும்
Nice one. Wow,Hundred bricks can teach u hundred lessons.
ReplyDeleteThank you Geetha Ravichandran
ReplyDelete